இந்தியாவின் மும்பை பங்குச்சந்தை மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் பங்களா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் உள்ள ஐகோர்ட்டு, மும்பை பங்குச்சந்தை வளாகம், மகாலட்சுமி பந்தய மைதானம் மற்றும் ஜூகு பகுதியில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் 'ஜல்சா' பங்களா ஆகிய இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என நேற்று இ-மெயில் மிரட்டல் வந்தது.
இதனால் சம்பந்தப்பட்ட இடங்களில் பொலிஸார் விரைந்தனர். மோப்ப நாய் பிரிவினர், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.
நீண்ட நேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில், சந்தேகப்படும்படியான பொருட்களோ அல்லது வெடிபொருட்களோ எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது.
இந்த மிரட்டல் இ-மெயிலை அனுப்பிய நபர் யார்? என்பதை கண்டறிய சைபர் கிரைம் பொலிஸார் ஐ.பி. முகவரியை வைத்து தீவிரமாக தேடிவருகின்றனர்.
கடந்த மாதம் 23-ந் திகதி மும்பை மேயருக்கு வந்த இ-மெயிலிலும் அமிதாப் பச்சன் வீடு மற்றும் பாடகர் தில்ஜித் தோசாஞ்ச் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை நடிகர் அமிதாப் பச்சன் சமீபத்தில் தனது பங்களா வாசலில் அமைக்கப்பட்டிருந்த புல்லட் புரூப் கண்ணாடி கூண்டிற்குள் நின்றபடி ரசிகர்களை சந்தித்து கைய சைத்தது குறிப்பிடத்தக்கது
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக