BREAKING
இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி

இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா

இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி டுபாயில் இன்று (13) இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்டத்திற்காக களமிறங்கிய சுமிர்த்தி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அதிவிரைவான ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுசேர்த்தனர்.

ஷபாலி வர்மா 68 ஓட்டங்களையும், சுமிர்த்தி மந்தனா 59 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றனர். அதன்பிறகு ஆடுகளம் வந்தவர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் பின்னர் இந்திய ஓட்ட எண்ணிக்கையை இலங்கை அணி வெகுவாக கட்டுப்படுத்தினர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மிதாலி அயோதா, சமதி அத்தபத்து, சமுதி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்நிலையில் 184 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"