ஜெஃப் டிம்மன்ஸ் பங்கேற்கும் இந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் ஜெஃப் டிம்மன்ஸுக்கு கிடைக்கும் முழுத் தொகையும், இலங்கையில் மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
ஜெஃப் டிம்மன்ஸுடன் அவரது மகனும் இலங்கை வந்துள்ளார்.
அவர்கள் தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான QR-654 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக, இசை நிகழ்ச்சியின் இலங்கை ஏற்பாட்டாளர்கள் சிலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக