BREAKING
சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தரை தேடும் பொலிஸார் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் ராசிகள் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ; ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தரை தேடும் பொலிஸார் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் ராசிகள் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ; ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது

பேஸ்புக் விருந்துகள் குறித்து புலனாய்வுத் தகவல்களைப் பெற விசேட திட்டம்

பேஸ்புக் விருந்துகள் குறித்து புலனாய்வுத் தகவல்களைப் பெற விசேட திட்டம்

எதிர்காலத்திலும் இவ்வாறான இடங்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களைப் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் விழும் அபாயம் உள்ளதால், இவ்வாறான விருந்துகள் குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இவ்வாறான விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அவை வலையமைப்புச் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வியாபாரங்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமது பிள்ளைகளின் உரையாடல்கள், நடத்தைகள் மற்றும் பயணங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துக் கவனம் செலுத்துமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, போதைப்பொருள் பேரழிவு காரணமாக 2025 ஆம் ஆண்டில் 175 நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், அவர்களில் 172 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டில் இதுவரை போதைப்பொருள் தொடர்பில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"