ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன். ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த புதன் பெயர்ச்சி வியாபாரம், வேலை வாய்ப்பு, நிதி விஷயங்கள் போன்றவற்றில் சிறப்பான பலன்களைத் தரும்.
இப்போது துலாம் ராசிக்கு செல்லும் புதனால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வருமானத்தில் உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. பேச்சாற்றல் மேம்படும். இந்த பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை திறம்பட யோசித்து எடுப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களால் தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படலாம்.
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் திறமையும், முடிவெடுக்கும் திறனும் பாராட்டப்படலாம். தொழிலதிபர்கள் புதிய நட்புகளால் நல்ல பலனைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக