BREAKING
சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம் ; சானக மதுகொட குற்றச்சாட்டு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! நாமலைத் தொடர்ந்து யோஷித மற்றும் ரோஹித தீவிர விசாரணை வலையில்! கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு உலகின் மிகக் குறுகலான வீடு - வெறும் 72 செ.மீ இடத்தில் இவ்வளவு வசதிகளா! சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம் ; சானக மதுகொட குற்றச்சாட்டு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! நாமலைத் தொடர்ந்து யோஷித மற்றும் ரோஹித தீவிர விசாரணை வலையில்! கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு உலகின் மிகக் குறுகலான வீடு - வெறும் 72 செ.மீ இடத்தில் இவ்வளவு வசதிகளா!

கொழும்புலண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு

கொழும்புலண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு

பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட வானூர்தி சேவைகள் பாதிக்கப்பட்டு பெரும் தாமதத்தையும் ரத்து நடவடிக்கைகளையும் சந்தித்தன.

இந்தநிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 வானூர்தி, இந்தத் தடங்கல் காரணமாக ஜெர்மனியின் பிராங்பர்ட் (Frankfurt) வானூர்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 16:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.

பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், வானூர்திகள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என வானூர்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"