BREAKING
யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்! முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள் வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம் யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்! முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள் வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்

யாழ். சுதுமலை வெள்ளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ; அதிரடி நடவடிக்கைக்கு முடிவு

யாழ். சுதுமலை வெள்ளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ; அதிரடி நடவடிக்கைக்கு முடிவு

இதற்கமைய, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென் - மேற்கு பிரதேச சபையும் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.

மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில், சுதுமலைப் பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களை உடனடியாகத் தூர்வாருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, வெள்ளநீர் இயற்கையாக வழிந்தோடி செல்லும் வகையில் நீர்வழிகளைச் சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் தேங்கும் அதிகளவான நீரை முறையாகத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இதற்காக, அப்பகுதியில் உள்ள பொருத்தமான குளங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தூர்வாரி, நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சுதுமலைப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படுவதுடன், நிலைமைகளுக்கு ஏற்ப மேலதிக நடவடிக்கைகளும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"