BREAKING
Nepal Flood 3 நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி உயிருடன் மீட்பு! மாவனல்லையில் வான் - டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: நால்வர் வைத்தியசாலையில் நேபாள வெள்ளத்தில் அசராமல் நின்ற பச்சை வீடு! வைரலாகும் அதிசய காட்சி பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் ரூ.290 கோடி வசூல்.. டாக்சிக் படத்தின் நிலை என்ன? செயற்கை நுண்ணறிவால் உலக நிதித்துறைக்கு பெரும் ஆபத்து - நிதி ஸ்திரத்தன்மை வாரியம் எச்சரிக்கை Nepal Flood 3 நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி உயிருடன் மீட்பு! மாவனல்லையில் வான் - டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: நால்வர் வைத்தியசாலையில் நேபாள வெள்ளத்தில் அசராமல் நின்ற பச்சை வீடு! வைரலாகும் அதிசய காட்சி பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் ரூ.290 கோடி வசூல்.. டாக்சிக் படத்தின் நிலை என்ன? செயற்கை நுண்ணறிவால் உலக நிதித்துறைக்கு பெரும் ஆபத்து - நிதி ஸ்திரத்தன்மை வாரியம் எச்சரிக்கை

பானதுர நிலங்கவின் உறவினர் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை - குடு சலிந்து குழுவினர் மீது சந்தேகம்

பானதுர நிலங்கவின் உறவினர் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை - குடு சலிந்து குழுவினர் மீது சந்தேகம்

களுத்துறை - பயாகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பானதுர நிலங்கவின் மைத்துனரான “திலா” என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் “குடு சலிந்து” என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிதாவின் குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"