BREAKING
இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை

நாட்டை விட்டு தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல்

நாட்டை விட்டு தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல்

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு எதிராக இன்டர்போல் ஊடாக சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குறித்த 236 பேரில் 110 பேருக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இதுதொடர்பான தகவல்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் இதுவரை 66 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள 97 சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 39 பேர் தற்போது தங்கியுள்ள நாடுகள் மற்றும் அவர்களின் இருப்பிடங்கள் தொடர்பில் தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களில் ஒருவர் எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"