சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது பிரார்த்தனைகளையும் மனவேதனைகளையும் எழுதி வெளிப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தின் வாயிலில் விசேட பதாகையொன்று வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பதாகையில், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களை மீண்டும் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும், அவர்களின் நிலை தொடர்பான உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் உறவினர்கள் துண்டுச் சீட்டுகளில் எழுதி ஒட்டியிருந்தனர்.
பல ஆண்டுகளாக தங்களது உறவினர்களின் நிலை குறித்து பதிலுக்காக காத்திருக்கும் குடும்பங்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக