BREAKING
5 நாட்களில் ரூ.138 கோடி வசூல்! பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ 5 மாதங்களில் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை Meta Description: மார்ச் மு சர்வதேச நெருக்கடியின் தாக்கம்: அத்தியாவசிய பொருட்களின் விலை 25% வரை அதிகரிக்கும் அபாயம்! 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 37 மனுக்கள் தாக்கல் – உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு FIFA சர்வதேச நடுவராக உயர்ந்த ஈழத்தமிழர் அனோஜென் கனகசிங்கம் – பெருமை சேர்த்த சாதனை 5 நாட்களில் ரூ.138 கோடி வசூல்! பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ 5 மாதங்களில் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை Meta Description: மார்ச் மு சர்வதேச நெருக்கடியின் தாக்கம்: அத்தியாவசிய பொருட்களின் விலை 25% வரை அதிகரிக்கும் அபாயம்! 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 37 மனுக்கள் தாக்கல் – உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு FIFA சர்வதேச நடுவராக உயர்ந்த ஈழத்தமிழர் அனோஜென் கனகசிங்கம் – பெருமை சேர்த்த சாதனை

இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகள் நாடு திரும்ப நடைமுறைகளை எளிதாக்குக சாணக்கியன் கோரிக்கை

இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகள் நாடு திரும்ப நடைமுறைகளை எளிதாக்குக சாணக்கியன் கோரிக்கை

இந்தியாவில் ஏதிலிகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதில் எதிர்கொள்ளும் சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களை உடனடியாக நீக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) இந்த விடயத்தை முன்வைத்த சாணக்கியன் இராசமாணிக்கம், நாட்டுக்குத் திரும்ப விரும்பும் ஏதிலிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, அவர்களின் குடியுரிமையை உறுதிப்படுத்துதல், பாதுகாப்பு அனுமதி பெறுதல், பயண ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுதல், காணி, வீடமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களில் தொடர்ந்து நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, யுத்த காலத்தில் உத்தியோகபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் எதிர்கொள்ளும் சட்டத் தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அமைச்சரவையின் அனுமதியுடன் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், இந்தியாவில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் அல்லது துணை உயர்ஸ்தானிகரகங்களை அணுகி தங்களது குடியுரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

விண்ணப்பதாரர்கள் தங்களிடம் உள்ள அடையாள மற்றும் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், அரச புலனாய்வுச் சேவை (SIS) ஊடாக பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்ற சாணக்கியன் இராசமாணிக்கம், ஏதிலிகள் நாடு திரும்புவதற்கான நடைமுறைகள், தேவையான ஆவணங்கள், பாதுகாப்பு அனுமதி மற்றும் நாடு திரும்பிய பின்னர் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் தெளிவான வழிகாட்டுதல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மீண்டும் நாடு திரும்பும் குடும்பங்களுக்கு காணி, வீடமைப்பு, இழப்பீடு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சட்ட ரீதியான தடைகளை நீக்குவதுடன், நாடு திரும்பும் குடும்பங்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான நடைமுறை ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"