களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகம பகுதியில், ஹொரனையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிப் பாரிய விபத்து ஏற்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னாசனத்தில் பயணித்த பெண்ணும் கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் கல்பாத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் மற்றும் 16 வயதுடைய சிறுமி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக