BREAKING
தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல் இரகசியத் தகவலால் பிடிபட்ட வயோதிபர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; 23 வயது இளைஞன் மற்றும் 16 வயது சிறுமி பலி உலகின் மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல் இரகசியத் தகவலால் பிடிபட்ட வயோதிபர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; 23 வயது இளைஞன் மற்றும் 16 வயது சிறுமி பலி உலகின் மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கொழும்பு மாநகர சபை மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரோசி சேனநாயக்கவிடம் விரைவில் விசாரணை

கொழும்பு மாநகர சபை மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரோசி சேனநாயக்கவிடம் விரைவில் விசாரணை

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்கவிடம் இந்த வாரத்திற்குள் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு மாநகர சபையில் 2010 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய அளவிலான ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஜூன் 29 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதனை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளார்.

விசாரணைகளின் அடுத்த கட்டமாக, அந்தக் காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகப் பொறுப்புகளை வகித்த முன்னாள் மேயர்களிடம் விளக்கங்கள் பெற ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க இந்த வாரம் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் மேயராகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"