BREAKING
யாழில் பௌர்ணமி தினத்தில் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை திருமணம், DJ நிகழ்ச்சிகளில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் ; வெளியான முக்கிய தகவல் அரசாங்க சேவையில் மனிதவள அபிவிருத்திக்காக GovHR ஆரம்பம் அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சீனப் பிரஜைகள் ; தீவிரமாகும் விசாரணைகள் யாழில் பௌர்ணமி தினத்தில் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை திருமணம், DJ நிகழ்ச்சிகளில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் ; வெளியான முக்கிய தகவல் அரசாங்க சேவையில் மனிதவள அபிவிருத்திக்காக GovHR ஆரம்பம் அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சீனப் பிரஜைகள் ; தீவிரமாகும் விசாரணைகள்

கிழக்கு காணி விவகாரத்தில் அரசின் புதிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு; இடைநிறுத்தக் கோரி ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்

கிழக்கு காணி விவகாரத்தில் அரசின் புதிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு; இடைநிறுத்தக் கோரி ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்

கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சரவை அண்மையில் எடுத்துள்ள புதிய தீர்மானம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி, இலங்கை நீதிக்கான மய்யம் (Centre for Justice Sri Lanka) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தின் படி, கிழக்கு மாகாணத்தில் காணி ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத காணி பயன்பாடு மற்றும் கடலோர அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட காணி ஒருங்கிணைப்புக் குழுவும், பிரதி காவல்துறைமா அதிபர் தலைமையிலான முழு அதிகாரம் கொண்ட விசேட காவல்துறை பிரிவும் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடவடிக்கை நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படாமல், கிழக்கு மாகாணத்தை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்படுவது சமத்துவக் கொள்கைக்கு முரணானது என இலங்கை நீதிக்கான மய்யம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது தெற்கு, வடமேல், வடமத்திய மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் தேசிய அளவிலான பிரச்சினைகள் என்பதால், ஒரு மாகாணத்தை மட்டும் தனிப்படுத்தி விசேட நடைமுறைகளை அறிமுகப்படுத்துவது தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கக்கூடும் என அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) உறுப்புரைகள் அனைத்து குடிமக்களுக்கும் இன, மத, மொழி மற்றும் பிராந்திய வேறுபாடின்றி சமத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே, ஒரே மாகாணத்திற்கு மட்டும் தனிப்பட்ட அதிகார அமைப்பை உருவாக்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக இருக்கக்கூடும் எனவும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, 1979ஆம் ஆண்டின் அரச காணிகள் (பொறுப்பேற்பு மீட்பு) சட்டம், அரச காணிகள் சட்டம், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம், கடலோரப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், புதிய அதிகார அமைப்புகளை உருவாக்குவதன் அவசியம் என்ன என்பதையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

மகாவலி அதிகார சபை, பிரதேச செயலாளர்கள் மற்றும் காவல்துறையினரின் ஊடாக தற்போதுள்ள சட்டங்களின் கீழ் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய நடைமுறைகள் ஏற்கனவே உள்ளதாகவும், நாட்டுக்குத் தேவைப்படுவது புதிய குழுக்கள் அல்ல; மாறாக, ஏற்கனவே உள்ள சட்டங்களை அனைத்து மாகாணங்களிலும் சமமாகவும் பாரபட்சமின்றியும் அமுல்படுத்தும் அரசியல் மனப்பாங்கே என அமைப்பு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதனால், அமைச்சரவை எடுத்துள்ள சர்ச்சைக்குரிய தீர்மானத்தை உடனடியாக இடைநிறுத்தி, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய வெளிப்படையான பொதுமக்கள் ஆலோசனைகளை நடத்தி, பின்னர் சமத்துவம் மற்றும் சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் இலங்கை நீதிக்கான மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடாத நிலையில், எதிர்வரும் நாட்களில் இது அரசியல் மற்றும் சட்ட ரீதியாக மேலும் முக்கிய விவாதப் பொருளாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"