அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கான ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளர்களுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் நாளை முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மொத்தமாக 270,025 குடும்பங்கள் நிதி உதவிகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.
இதற்காக ரூ. 3.28 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகை தகுதிபெற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் கட்டம் கட்டமாக வரவு வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டப் பயனாளர்களுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் கடந்த 18 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக