BREAKING
ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றம் ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றம் ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு

தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் இந்த வழக்கு, கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இந்திய ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜய் - சங்கீதா தம்பதியினர் மீண்டும் இணைவது தொடர்பாக குடும்ப மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் வழக்கு உடனடி தீர்ப்பின்றி அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. எனினும், வழக்கின் உண்மை நிலை மற்றும் இருதரப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியாகவில்லை.

திரையுலகில் முன்னணி நடிகராகவும், அரசியலில் முக்கிய தலைவராகவும் இருக்கும் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த விவகாரம் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணையில் வழக்கின் அடுத்த கட்ட நிலைமை தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"