BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியீடு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியீடு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்று முற்பகல் 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து முதலாம் பகுதி வினாத்தாள் முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், பரீட்சை தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் மற்றும் அறிவிப்புகள் மூலம் தொடர்ந்து அறிந்துகொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சை அனுமதி அட்டைகள், பரீட்சை நிலைய விபரங்கள் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் தொடர்பான தகவல்கள் உரிய காலப்பகுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பரீட்சை, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் முக்கிய கட்டமாகக் கருதப்படுவதால், மாணவர்கள் தற்போதே தங்களது ஆயத்தங்களை திட்டமிட்ட முறையில் முன்னெடுக்க வேண்டியது அவசியம் என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"