BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

குருணாகலில் மர்ம சம்பவம் ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு

குருணாகலில் மர்ம சம்பவம் ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு

குருணாகல் தொடருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘களனி குமாரி’ தொடருந்து திடீரென ஓட்டுநர் இன்றி முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 28ஆம் திகதி இரவு 9.30 மணி முதல் 10.00 மணிக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தொடருந்தின் பிரேக் செயலிழந்திருக்கலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்டமாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தொடருந்து எந்த கட்டுப்பாடும் இன்றி சுமார் 100 மீட்டர் தூரம் நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அது குருணாகல் நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள மேடான பகுதியில் சென்று தானாகவே நின்றுள்ளது. இதற்கிடையில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிவேக மீனகயா தொடருந்து அதே பாதையில் வந்ததால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.

நிலைமையை உணர்ந்த ரயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு மீனகயா தொடருந்தின் ஓட்டுநருக்கு தகவல் வழங்கியதால், அவர் அவசரமாக ரயிலை நிறுத்தி விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தொடருந்து திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தொடருந்தில் கை பிரேக் கூட செயல்படுத்தப்படவில்லை என சந்தேகம் எழுந்துள்ளதுடன், தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"