BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

வவுனியாவில் கோர விபத்து வீதியில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் மீது பாய்ந்த கார், ஸ்தலத்திலேயே பலி

வவுனியாவில் கோர விபத்து வீதியில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் மீது பாய்ந்த கார், ஸ்தலத்திலேயே பலி

வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. A-9 பிரதான வீதியில் நடந்த இந்த விபத்தில், வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், முன்னால் சென்ற காரை பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதியதன் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நடந்துசென்ற இளைஞர்கள் மீது மோதியுள்ளது.

உயிரிழந்த இருவரும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் யாழ்ப்பாண முன்னாள் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்களின் மகன் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"