BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

இரண்டரை மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது தந்தையின் விரைவு நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது

இரண்டரை மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது தந்தையின் விரைவு நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, கஹடுவ, துடுவெகொட பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரண்டரை மாத வயதுடைய பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாக சந்தேகிக்கப்படும் தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் தெரிவிப்பதாவது, குழந்தையை கிணற்றில் வீசிய பின்னர், தனது மகளை கிணற்றில் தவறவிட்டதாக அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கணவர், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த குழந்தையை உடனடியாக வெளியே எடுத்து, அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, கிணற்றின் ஆழம் குறைவாக இருந்ததாலும், தந்தையின் உடனடி நடவடிக்கையாலும் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"