BREAKING
100 கோடி வசூலுக்குப் பிறகு சமந்தாவின் பதிலடி! ஹீரோயின் படத்தை அவமதித்த தியேட்டர் உரிமையாளருக்கு மறைமுக பதில் நுரையீரலை தாக்கும் நிமோனியா – ஆரம்ப அறிகுறிகள், ஆபத்து காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்; எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை? அய்யனார் துணை’ சீரியல் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு? ஹீரோயினுக்கு அதிகபட்ச ஊதியம்! மாத்தளையில் காட்டு யானை தாக்கி 45 வயது பெண் உயிரிழப்பு 100 கோடி வசூலுக்குப் பிறகு சமந்தாவின் பதிலடி! ஹீரோயின் படத்தை அவமதித்த தியேட்டர் உரிமையாளருக்கு மறைமுக பதில் நுரையீரலை தாக்கும் நிமோனியா – ஆரம்ப அறிகுறிகள், ஆபத்து காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்; எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை? அய்யனார் துணை’ சீரியல் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு? ஹீரோயினுக்கு அதிகபட்ச ஊதியம்! மாத்தளையில் காட்டு யானை தாக்கி 45 வயது பெண் உயிரிழப்பு

மத்திய அதிவேக வீதியின் அடுத்த கட்ட பணிகள் இன்று ஆரம்பம் ; பில்லியன் ரூபாய் செலவில் புதிய முன்னேற்றம்

மத்திய அதிவேக வீதியின் அடுத்த கட்ட பணிகள் இன்று ஆரம்பம் ; பில்லியன் ரூபாய் செலவில் புதிய முன்னேற்றம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பகுதியின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் இன்று (29) அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகவுள்ளன. ரம்புக்கனை முதல் கலகெதர வரை 18.7 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்தப் பகுதி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான பகுதியின் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவை அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தவரை, முதற்கட்டத்திற்கு 78 பில்லியன் ரூபாயும், இரண்டாம் கட்டமான ரம்புக்கனை – கலகெதர பகுதியிற்கு 112.4 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் திட்டத்திற்கான முழு நிதியும் உள்நாட்டு ஆதாரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த அதிவேக நெடுஞ்சாலை திட்டம், மத்திய மாகாணங்களுக்கான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"