BREAKING
தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி

போக்குவரத்து அமைச்சில் அதிரடி மாற்றம்? ; செயலாளர் பதவியில் இருந்து விலக கபில பெரேரா முடிவு

போக்குவரத்து அமைச்சில் அதிரடி மாற்றம்? ; செயலாளர் பதவியில் இருந்து விலக கபில பெரேரா முடிவு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பணியாற்றி வந்த கபில பெரேரா தனது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது முடிவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு விளக்கமளித்ததுடன், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீர்மானத்திற்கு பின்னணியாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதேவேளை, செயலாளர் பதவியிலிருந்து விலகிய பின்னர், பேராசிரியர் கபில பெரேரா மீண்டும் கல்வித்துறைக்குத் திரும்ப தயாராகி வருவதாகவும், அவர் முன்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் போக்குவரத்து அமைச்சின் நிர்வாக அமைப்பில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"