BREAKING
கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது மட்டக்களப்பில் பேருந்து விபத்து! வெறும் வாக்குறுதிகள் அல்ல; தரவுகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட பொருளாதார மாற்றமே இன்று எமக்குத் தேவை கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது மட்டக்களப்பில் பேருந்து விபத்து! வெறும் வாக்குறுதிகள் அல்ல; தரவுகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட பொருளாதார மாற்றமே இன்று எமக்குத் தேவை

கிளிநொச்சியில் வீடுகளுக்குள் புகுந்து திருடிய இளம் தம்பதி கைது ; வீடுகளில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

கிளிநொச்சியில் வீடுகளுக்குள் புகுந்து திருடிய இளம் தம்பதி கைது ; வீடுகளில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடி வந்த இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விநாயகபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 24 வயதுடைய கணவரும் 20 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, உதயநகர், அம்பாள்குளம், விநாயகபுரம், சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குறைந்தது 09 வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் இந்த தம்பதி ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவங்களின் போது திருடப்பட்ட 10 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள், கைப்பேசிகள், தொலைக்காட்சி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"