BREAKING
FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள் தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம் முதியவரின் உயிரை பறித்த லொறி ; தீவிரமாகும் விசாரணை அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழக்கும் தாழமுக்கம் ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள் தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம் முதியவரின் உயிரை பறித்த லொறி ; தீவிரமாகும் விசாரணை அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழக்கும் தாழமுக்கம் ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் தொகுதிக்குத் தனது தபால் வாக்கு ஒன்று தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும், அந்த வாக்கு சரியாக எண்ணப்பட்டிருந்தால் தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் அல்லது குலுக்கல் முறை வந்திருக்கும் என்றும் அவர் வாதிட்டுள்ளார். 

எனவே, இந்த வழக்கு முடியும் வரை சீனிவாச சேதுபதி சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இன்று நடைபெற்ற விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு தபால் வாக்கு மாறியதால் தேர்தல் முடிவு மாறியுள்ள இந்தச் சிக்கலான வழக்கில், தீர்ப்பைத் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"