BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

சம்மாந்துறையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு; மாடுகளுடன் கார் மீட்பு

சம்மாந்துறையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு; மாடுகளுடன் கார் மீட்பு

சம்மாந்துறை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளை கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் ஒன்றும், அதில் இருந்த மாடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பு நேற்று 10.08.2026 அன்று சம்மாந்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பகுதியில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி, அவற்றை காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் கும்பலை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த குற்றச் செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும், தப்பியோடிய இரு சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான மேலதிக தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"