BREAKING
உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் – பல இடங்களில் பரபரப்பு யோசித ராஜபக்சவின் வெளிநாட்டு பயண கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு 18 வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல் மேர்வின் சில்வா வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டதாக வெளியான தகவலை நடிகை ரிது ஆகர்ஷா மறுப்பு தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் – பல இடங்களில் பரபரப்பு யோசித ராஜபக்சவின் வெளிநாட்டு பயண கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு 18 வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல் மேர்வின் சில்வா வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டதாக வெளியான தகவலை நடிகை ரிது ஆகர்ஷா மறுப்பு தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

"ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு நேர்ந்த அவமானம்": நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தல் - கதறி அழுத விஜயா!

"ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு நேர்ந்த அவமானம்": நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தல் - கதறி அழுத விஜயா!
விஜய் டிவியின் முன்னணி சீரியலான 'சிறகடிக்க ஆசை' தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மனோஜ் செய்த தவற்றால் வீட்டை இழந்து நடுத்தெருவிற்கு வந்த அண்ணாமலை, மீனா வீட்டில் மரியாதையுடன் நடத்தப்படுகிறார். ஆனால், வசதியான வாழ்க்கைக்காக ஸ்ருதி வீட்டிற்குச் சென்ற விஜயாவிற்கு அங்குப் பெரும் சோகம் காத்திருக்கிறது. ஸ்ருதி வீட்டில் அவருக்கு முறையான உணவோ, காபியோ வழங்கப்படாததுடன், விஜயாவைப் பூட்டி வைத்துவிட்டு ஸ்ருதியின் பெற்றோர் வெளியே செல்கின்றனர். இதனால் மனமுடைந்த விஜயா, தன் தோழி பார்வதி வீட்டிற்குச் செல்ல முயல, "கணவனுடன் வந்தால் மட்டுமே அனுமதி" என அவர் முகத்தில் அடித்தாற்போல் கூறிவிடுகிறார். அடுத்த வார ப்ரோமோவில், ஸ்ருதி வீட்டிற்கு வரும் நண்பர்கள் மது அருந்திவிட்டு விஜயாவை நடனம் ஆடுமாறு வற்புறுத்துகின்றனர். ஸ்ருதியின் அம்மாவும் விஜயாவை ஆடும்படி வற்புறுத்த, வேறு வழியின்றி அவர் கடும் மனவேதனையும் அவமானமும் அடைகிறார். இறுதியில் தன் அறைக்குச் சென்று கதறி கதறி அழுவதுடன், அண்ணாமலையைப் பிரிந்து வந்ததற்காக வருத்தப்படுகிறார். விஜயாவின் இந்த வீழ்ச்சியைப் பார்த்த ரசிகர்கள், "தன் வினை தன்னைச் சுடும்" எனச் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்த எபிசோடுகளில் விஜயா மீண்டும் அண்ணாமலையிடம் தஞ்சமடைவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"