BREAKING
உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் – பல இடங்களில் பரபரப்பு யோசித ராஜபக்சவின் வெளிநாட்டு பயண கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு 18 வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல் மேர்வின் சில்வா வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டதாக வெளியான தகவலை நடிகை ரிது ஆகர்ஷா மறுப்பு தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் – பல இடங்களில் பரபரப்பு யோசித ராஜபக்சவின் வெளிநாட்டு பயண கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு 18 வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல் மேர்வின் சில்வா வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டதாக வெளியான தகவலை நடிகை ரிது ஆகர்ஷா மறுப்பு தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

"ஹேக்கர்களின் அரசு": கோடி ரூபாய் மாயம் குறித்து நாமல் ராஜபக்ச கடும் சாடல்!

"ஹேக்கர்களின் அரசு": கோடி ரூபாய் மாயம் குறித்து நாமல் ராஜபக்ச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கத்தை "ஹேக்கர்களின் அரசு" என வர்ணித்துள்ள நாமல் ராஜபக்ச, நிதி அமைச்சின் ஊடாக 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஹொரணையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், இவ்வளவு பெரிய தொகை மாயமாகியும் நிதியமைச்சரான ஜனாதிபதியும், மத்திய வங்கியும் மெத்தனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார். பழைய திருட்டு முறைகளைத் தாண்டி, தற்போது அதிநவீனத் தொழில்நுட்பம் மூலம் மக்களின் பணம் சுரண்டப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். துறைமுகத்தில் 323 கொள்கலன்கள் மாயமானது மற்றும் 13 பில்லியன் ரூபாய் வங்கித் திருட்டு போன்ற ஊழல் பட்டியலை அவர் வரிசைப்படுத்தினார். மேலும், கச்சதீவு விவகாரத்தில் இலங்கையின் இறையாண்மையை எவரும் மீற முடியாது என வலியுறுத்திய அவர், ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை முடக்கிவிட்டதாகச் சாடினார். குறிப்பாக, மகிந்த ராஜபக்ச காலத்திற்குப் பிறகு ரயில்வே துறையில் எவ்வித புனரமைப்பும் நடக்கவில்லை என்றும், மழையால் சேதமடைந்த பாதைகளைக் கூட திருத்த முடியாத கையாலாகாத அரசாக இது உள்ளதென்றும் அவர் தெரிவித்தார். நீதிமன்ற வழக்குகளை அரசியல் மயப்படுத்துவது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்ட அவர், அரசின் ஊழல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வரை புகார்கள் சென்றுள்ளதாகத் தெரிவித்தார். பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என அவர் தனது உரையில் எச்சரித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"