BREAKING
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: மீண்டும் வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 1' - விஜய் டிவியின் அதிரடி அறிவிப்பு! விராட் கோலி - சுப்மன் கில் 'கலகல' மோதல்: சாய் சுதர்சனின் அதிரடி சதத்தையும் மீறி ஆர்சிபி அபார வெற்றி! ஈரானின் எண்ணெய் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா அதிரடி: சீன சுத்திகரிப்பு ஆலை மற்றும் 40 நிறுவனங்கள் மீது புதிய தடைகள்! சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி: 4,700 டொலரை நெருங்கியது - இலங்கையிலும் மாற்றங்கள்! கடற்றொழிலாளரை சித்திரவதை செய்த கடற்படை அதிகாரி: பிணையில் விடுதலை - புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடர நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: மீண்டும் வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 1' - விஜய் டிவியின் அதிரடி அறிவிப்பு! விராட் கோலி - சுப்மன் கில் 'கலகல' மோதல்: சாய் சுதர்சனின் அதிரடி சதத்தையும் மீறி ஆர்சிபி அபார வெற்றி! ஈரானின் எண்ணெய் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா அதிரடி: சீன சுத்திகரிப்பு ஆலை மற்றும் 40 நிறுவனங்கள் மீது புதிய தடைகள்! சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி: 4,700 டொலரை நெருங்கியது - இலங்கையிலும் மாற்றங்கள்! கடற்றொழிலாளரை சித்திரவதை செய்த கடற்படை அதிகாரி: பிணையில் விடுதலை - புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடற்றொழிலாளரை சித்திரவதை செய்த கடற்படை அதிகாரி: பிணையில் விடுதலை - புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடற்றொழிலாளரை சித்திரவதை செய்த கடற்படை அதிகாரி: பிணையில் விடுதலை - புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்குக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 5-ஆம் திகதி 'சுருக்கு வலை' பயன்படுத்தியதாகக் கூறி நந்தீசன் என்ற கடற்றொழிலாளரைக் கைது செய்த கடற்படை குழுவினர், அவரைச் சட்டப்படி ஒப்படைக்காமல் சுமார் 2 மணிநேரம் முழங்காலில் நிற்க வைத்துத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்டவர் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது, பொலிஸார் சாதாரண தாக்குதல் பிரிவின் கீழ் (குற்றவியல் கோவை 314) வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இது ஒரு திட்டமிட்ட சித்திரவதை என்பதால், 1994-ஆம் ஆண்டு 22-ஆம் இலக்கச் சித்திரவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர் தரப்பு சட்டத்தரணி கடும் வாதத்தை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததுடன், முறையான சாட்சிகள் மற்றும் சான்றுப் பொருட்களுடன் சித்திரவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் எதிர்வரும் 22-ஆம் திகதி மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்குக் கட்டளையிட்டார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"