இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) சுமார் 15.8 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படும் எனக் குறிப்பிட்டு, மின்சார சபை 13.56% கட்டண உயர்வை கோரியிருந்தது. எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நுகர்வோரின் மின் பயன்பாட்டு அலகுகளின் அடிப்படையில் வெவ்வேறு சதவீதங்களில் இந்த உயர்வை அமுல்படுத்தியுள்ளது.
இதன்படி, குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு குறைந்தளவு சதவீதமும், அதிக அலகுகளைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அதிகபட்சமாக 25% வரையிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் உற்பத்தித் திறன் குறைவு மற்றும் டீசல் மூலமான மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக