சில நாடுகளில், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு உள்ளூர் பெண்களுடன் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து கொண்டு வாழும் நடைமுறை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடைமுறை முக்கியமாக இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. இதில், சுற்றுலா பயணிகள் சில நாட்கள் அல்லது மாதங்கள் வரை பெண்களை தங்களுடன் மனைவியாக வாழ ஒப்பந்தம் செய்கின்றனர்.
இந்த காலப்பகுதியில், அந்த பெண்கள் துணையாக இருப்பதுடன், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும், அன்றாட தேவைகளில் உதவுபவர்களாகவும் செயல்படுகின்றனர். ஒப்பந்த காலம் முடிந்ததும், இருவரும் தனித்தனியாகப் பிரிந்து செல்கின்றனர்.
இது சில பெண்களுக்கு வருமானம் ஈட்டும் ஒரு வழியாகக் கருதப்படுகின்றது. ஆனால், இத்தகைய நடைமுறைகள் சமூக, சட்ட மற்றும் மனித உரிமை கோணங்களில் பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்களுக்கு நிரந்தரமான கட்டணம் எதுவும் இல்லை. பெண்ணின் வயது, கல்வி, தோற்றம் மற்றும் ஒப்பந்த காலம் போன்ற காரணிகளின் அடிப்படையில் தொகை மாறுபடும். கிடைத்த தகவல்களின் படி, இந்த தொகை குறைந்தபட்சம் சுமார் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் பல லட்ச ரூபாய்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில், இந்த உறவுகள் பின்னர் நிரந்தர திருமணமாக மாறுவதும் காணப்படுகின்றது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக