BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சென்சார் சிக்கல் வெளியீடு மீண்டும் தாமதம்

ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சென்சார் சிக்கல் வெளியீடு மீண்டும் தாமதம்

நடிகர் Vijay நடித்துள்ள Jana Nayagan திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படத்தின் வெளியீடு தாமதமானது.

இந்த நிலையில், சென்சார் சிக்கலை தீர்க்கும் நோக்கில் படக்குழுவினர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். எனினும் அவர்கள் எதிர்பார்த்த தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்காமல் வழக்கு இழுபறியாகியதால், பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெற்று ரிவைசிங் குழுவிடம் விண்ணப்பித்தனர்.

அதன்படி, மார்ச் 9ஆம் தேதி ரிவைசிங் குழு இந்த திரைப்படத்தை பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குழுவில் உள்ள ஒரு உறுப்பினருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், நேற்று நடைபெறவிருந்த திரையிடல் நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அடுத்ததாக எப்போது திரைப்படம் பார்வையிடப்படும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. இதனால் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்களிடையே மீண்டும் ஏமாற்றமும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"