BREAKING
தெற்காசியாவில் இலங்கை படைத்த சாதனை ; தாய் மரண விகிதம் வீழ்ச்சி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து கோர விபத்தில் வெளி நாட்டு பெண்கள் மூவர் காயம்! ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் உத்தரவு காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட பதின்ம வயது சிறுமி; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்! தெற்காசியாவில் இலங்கை படைத்த சாதனை ; தாய் மரண விகிதம் வீழ்ச்சி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து கோர விபத்தில் வெளி நாட்டு பெண்கள் மூவர் காயம்! ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் உத்தரவு காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட பதின்ம வயது சிறுமி; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்!

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டடமொன்றிலேயே இன்று (17) அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகப் பரவிய தீயை அணைப்பதற்காக இரத்தினபுரி நகர தீயணைப்புப் பிரிவும் வரவழைக்கப்பட்டுள்ளது.

தீ பரவியுள்ள கட்டடமானது இதற்கு முன்னர் உள்நோயாளர் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பின்னர் புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் குறித்த விடுதி புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்தினால் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பதுடன், மின்சாரக் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.    

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"