BREAKING
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி

இலங்கையில் பிறந்த ஆய்வாளர் பாலி புலேந்திரன் தலைமையில் யுனிவர்சல் சுவாச தடுப்பூசி கண்டுபிடிப்பு

இலங்கையில் பிறந்த ஆய்வாளர் பாலி புலேந்திரன் தலைமையில் யுனிவர்சல் சுவாச தடுப்பூசி கண்டுபிடிப்பு

Bali Pulendran தலைமையிலான Stanford University School of Medicine மருத்துவ ஆராய்ச்சி குழு, பல்வேறு சுவாசத் தொற்றுநோய்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் “யுனிவர்சல்” தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

பாரம்பரிய தடுப்பூசிகள் குறிப்பிட்ட வைரஸ் மாறுபாடுகளுக்கே பாதுகாப்பளிக்கும்போது, இந்த புதிய தடுப்பூசி ஒரே வைரஸை மட்டுமல்லாமல் பல்வேறு சுவாச வைரஸ்களுக்கும் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட ஆய்வுகளில், இது உடலின் இயற்கை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி வலுவான நோய் எதிர்ப்பு செயல்பாட்டை தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய சுவாச வைரஸ்களுக்கும் இது பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு உலகளாவிய அளவில் சுவாசத் தொற்றுகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. மனிதர்களில் விரிவான பரிசோதனைகள் மற்றும் கட்டுப்பாட்டு அங்கீகாரங்கள் முடிந்த பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"