அரசாங்கம் நிறுவியுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, விசேட வைத்தியர்கள் சங்கம் 2.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை விசேட வைத்தியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விசேட வைத்தியர் ஆர். ஞானசேகரம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) பிற்பகல் கையளித்தார்.
இந்நிகழ்வில் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் ரசிக குணபால, பொருளாளர் விசேட வைத்தியர் திலீப அமரசூரிய ஆகியோர் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக