BREAKING
18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்! இலங்கைக்கு நீண்டகால ரூபாய் நிதியுதவி ; உலக வங்கிக் குழுமம் புதிய திட்டம்! ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்! 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்! இலங்கைக்கு நீண்டகால ரூபாய் நிதியுதவி ; உலக வங்கிக் குழுமம் புதிய திட்டம்! ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்!

முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்!

முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்!

தமிழ்நாடு அரச ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்க்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றுள்ளது.

குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.

பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.

எனவே, தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு, அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் “தந்தையர் மகப்பேறுகால விடுப்பு” (Paternity Leave) வழங்கியும், அவ்விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ துய்த்துக் கொள்ளவும் அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"