BREAKING
மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு ரவி செனவிரத்னவின் மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிப்பு டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு ரவி செனவிரத்னவின் மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிப்பு டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி

வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

குறிப்பாக, இரவு வேளைகளில் உடப்பு பாலம், புளிச்சாக்குளம் பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும், வீதிகளிலும் மாடுகள் கூட்டம் கூட்டமாகப் படுத்து உறங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது.

குறித்த மாடுகள் புளிச்சாக்குளம் மற்றும் பிங்கட்டி பகுதிகளில் இருந்து அவற்றின் உரிமையாளர்களால் இந்தப் பகுதிகளுக்கு விரட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், இரவு நேரங்களில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மாடுகளுடன் மோதி விபத்துகள் ஏற்படுவதுடன், அண்மைக்காலமாக உயிரிழப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை இரவு வேளைகளில் தங்களது பண்ணைகளில் கட்டி வைக்காமல் வீதிகளில் நடமாட விடுவதே இப்பிரச்சினைக்குக் காரணம் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, வீதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றி நடமாடுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடப்பு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"