BREAKING
11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கடூழிய சிறை WhatsApp பயனர்களுக்கு புதிய வசதி ; இனி குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம் இளைஞர்களே அவதானம் ; நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV தொற்று மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை ; நிபந்தனைகள் மீறினால் சட்ட நடவடிக்கை போதைக்கு அடிமை ஆறு வீடுகளில் கொள்ளை! அத்திடிய குரா கைது 11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கடூழிய சிறை WhatsApp பயனர்களுக்கு புதிய வசதி ; இனி குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம் இளைஞர்களே அவதானம் ; நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV தொற்று மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை ; நிபந்தனைகள் மீறினால் சட்ட நடவடிக்கை போதைக்கு அடிமை ஆறு வீடுகளில் கொள்ளை! அத்திடிய குரா கைது

இளைஞர்களே அவதானம் ; நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் தொற்று

இளைஞர்களே அவதானம் ; நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் தொற்று

2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் வரையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் மொத்தம் 88 புதிய HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மாதவி குணரத்ன, இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது, நாட்டில் புதிதாக 708 HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

1987ஆம் ஆண்டு முதலாவது HIV தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட காலத்திலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் புதிய தொற்றாளர்களை நாம் அடையாளம் கண்டு வருகின்றோம்.

2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது, நாட்டில் இதுவரை மொத்தமாக 8,111 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளையும் கருத்திற்கொள்ளும்போது, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் 88 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளாவர்” எனத் தெரிவித்தார்.

இளையோர் மத்தியில் பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதுடன், HIV தொற்று தொடர்பான விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உரிய மருத்துவப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"