BREAKING
பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பதவி விலகல்! ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தமிழர் பகுதியில் சகோதரர்களுக்கு நடந்த பெரும் துயரம்; தம்பியின் கண் முன்னே பிரிந்த அண்ணனின் உயிர் வேலைநிறுத்தப் போராட்டம் ; பல்கலைக்கழகப் பரீட்சைகள் ஒத்திவைப்பு ஒரே காதலனுக்காக போட்டி ; 2 இளம்பெண்கள் பேருந்து நிலையத்தில் செய்த செயல் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பதவி விலகல்! ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தமிழர் பகுதியில் சகோதரர்களுக்கு நடந்த பெரும் துயரம்; தம்பியின் கண் முன்னே பிரிந்த அண்ணனின் உயிர் வேலைநிறுத்தப் போராட்டம் ; பல்கலைக்கழகப் பரீட்சைகள் ஒத்திவைப்பு ஒரே காதலனுக்காக போட்டி ; 2 இளம்பெண்கள் பேருந்து நிலையத்தில் செய்த செயல்

பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பதவி விலகல்!

பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பதவி விலகல்!

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பதவி விலக முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாகரிகமற்ற குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி மனு தாக்கல் செய்த நிலையில், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு அளித்தார்.

இதனிடையே, அருள் விக்னேஷ் மீது பிணையில் வெளிவர முடியாத 3 பிரிவுகள் மற்றும் அரச ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2.30 அளவில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்வதற்கான பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கு மின்னஞ்சல் மூலம் பதவி விலகவுள்ளதாக அருள் விக்னேஷ் கடிதம் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அவர் தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"