BREAKING
பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள் பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்

வகுப்பறையில் மாணவர்கள் மோதல்; ஓடிவந்த அதிபருக்கு காத்திருந்த டிவிஸ்ட்!

வகுப்பறையில் மாணவர்கள் மோதல்; ஓடிவந்த அதிபருக்கு காத்திருந்த டிவிஸ்ட்!

மத்தளையில் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற ஒரு அழகான பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மத்தளை மெதிஹக்க மஹிந்த இடைநிலைப் பள்ளியின் உயர்தர வகுப்பு (A/L) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, பள்ளியின் அதிபர் திரு. சுசந்த திசநாயக்கவின் பிறந்தநாளை ஒரு ஆச்சரியமான கொண்டாட்டமாக மாற்றியமைத்தனர்.

இந்தக் கொண்டாட்டத்தைத் திட்டமிட்ட மாணவர்கள், உயர்தர வகுப்பு அறையில் வேண்டுமென்றே சத்தங்களை எழுப்பி, 'உயர்தர வகுப்பு மாணவர்கள் சண்டையிடுகிறார்கள்' என்ற தகவலை அதிபருக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தனது அலுவலகத்திலிருந்து விரைந்து வந்த அதிபர், அங்கு எந்தச் சண்டையையும் காணவில்லை மாறாக, அனைவரும் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்குத் தயாராக நிற்பதைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்துள்ளார்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களால் மிகவும் மதிக்கப்படும் மற்றும் நேசிக்கப்படும் அந்த அதிபர், புன்னகையுடன் தனது பாடசாலை மஆணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கொண்டாடினார்.

இந்த தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த அதிபருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"