BREAKING
நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்; நால்வரின் இறுதிக்கிரியை இன்று இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து பொலிஸாரின் தடைகளை மீறி நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் 4 பில்லியன் நிதி மோசடி ; இரு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் கைது கிளிநொச்சி - சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் ; நியாயமான கோரிக்கையை தடுத்தது ஏன்? நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்; நால்வரின் இறுதிக்கிரியை இன்று இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து பொலிஸாரின் தடைகளை மீறி நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் 4 பில்லியன் நிதி மோசடி ; இரு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் கைது கிளிநொச்சி - சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் ; நியாயமான கோரிக்கையை தடுத்தது ஏன்?

பொலிஸாரின் தடைகளை மீறி நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல்

பொலிஸாரின் தடைகளை மீறி நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர்நாள் வாரம் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்க பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர் தடைகளை மீறியும் கொட்டகை அமைக்கப்பட்டு , மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

நெல்லியடி நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளைப் பொலிஸார் அகற்ற முற்பட்டபோது, ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஐவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்த வேளை, கொட்டகைகளை பொலிஸார் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொலிஸ் விசாரணையின் பின்னர் ஏற்பாட்டுக் குழுவினர், மீண்டும் அதே இடத்தில் கொட்டகை அமைக்க முற்பட்டபோது பொலிஸாருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லியடி நகரில் நினைவேந்தல் கொட்டகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"