BREAKING
புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யாழ்.சுன்னாகம் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ; விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு நீதிமன்ற நுழைவாயிலில் நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்ட இரு சிறுவர்கள் திடீர் மாயம் குகைக்குள் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி ; எதிர்காலத்துக்காக பலர் செய்த நெகிழ்ச்சி செயல் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யாழ்.சுன்னாகம் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ; விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு நீதிமன்ற நுழைவாயிலில் நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்ட இரு சிறுவர்கள் திடீர் மாயம் குகைக்குள் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி ; எதிர்காலத்துக்காக பலர் செய்த நெகிழ்ச்சி செயல்

யாழ்.சுன்னாகம் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ; விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு

யாழ்.சுன்னாகம் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ; விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு

இது தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தனது வீட்டிற்கு அருகில் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ச்சியாக அதிக சத்தத்துடன் ஒலிபரப்பப்படுவதால் ஒலி மாசுபாடு ஏற்படுவதாகவும், இதனால் தனது வயதான தாயாரின் ஆரோக்கியம் மற்றும் பிள்ளையின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, கடந்த 17.10.2026 அன்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர், அடையாளம் தெரியாத பொலிஸ் அதிகாரி ஒருவர் தொலைபேசி இலக்கமொன்றிலிருந்து தம்மைத் தொடர்புகொண்டு அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக முறைப்பாட்டாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் தனது மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அவர் பிரதமர் அலுவலகத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு அனுப்பியுள்ளார்.

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நடைமுறையிலுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக உரிய விசாரணைகளை முன்னெடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விசாரணைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாட்டாளருக்கு தாமதமின்றி அறிவிக்குமாறும், விசாரணை தொடர்பான அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கும் சமர்ப்பிக்குமாறும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"