BREAKING
இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; பாடசாலை பைக்குள் காத்திருந்த ஷாக் காதி நீதிபதி அதிரடி கைது ; மனைவியுடன் இணைந்து அரங்கேற்றிய செயல் அம்பலம் தமிழர் பிரதேசத்தில் பள்ளிவாசல் பகுதியில் தகாத செயலால் பிடிபட்ட இளைஞர் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை ; 19 வயது இளைஞன் கைது மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; பாடசாலை பைக்குள் காத்திருந்த ஷாக் காதி நீதிபதி அதிரடி கைது ; மனைவியுடன் இணைந்து அரங்கேற்றிய செயல் அம்பலம் தமிழர் பிரதேசத்தில் பள்ளிவாசல் பகுதியில் தகாத செயலால் பிடிபட்ட இளைஞர் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை ; 19 வயது இளைஞன் கைது மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள்

இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; பாடசாலை பைக்குள் காத்திருந்த ஷாக்

இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; பாடசாலை பைக்குள் காத்திருந்த ஷாக்

புத்தளம், பாலவி பகுதியில் சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகா ஒருவர் பாடசாலை பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 75 இலட்சம் இலட்சம் ரூபாவிற்கு அதிக பெறுமதியுடய ஒரு கிலோகிராம் 35 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் புத்தளம் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருளை கடத்திக் கொண்டு செல்வதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புத்தளம் தில்லையடி பகுதியில் வைத்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர்.

இதன்போது பாடசாலை பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.

இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய கண்காணிப்பின் போதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பாலாவி பகுதியில் நன்கு அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஹில்மியின் பிரதான உதவியாளரான 27 வயதுடைய மொஹமட் அம்ஹர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் போதை கடத்தல்காரரான ஹில்மி அப்பகுதியிலிருந்து தப்பி ஓடி தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாலாவி போதை கடத்தல் காரர் ஹில்மியிடம் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக போதைபொருட்களை கடத்தும் விநியோகஸ்தரராக செயற்பட்டு வந்ததாமவும் கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று வியாழக்கிழமை (19) புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"