BREAKING
மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள் தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள் தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை

தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை

அம்பாறை பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் துறவறம் பூண்டிருந்த சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக, பௌத்த தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 14 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (17) உறுதி செய்தது.

இருவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், அம்பாறை மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தண்டனையில் தலையிடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனத் தீர்ப்பளித்தது.

சிறுவன் மீது தனக்கிருந்த நம்பிக்கையையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியே, குற்றவாளி இக்குற்றத்தைப் புரிந்துள்ளார் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குற்றம் இடம்பெற்ற போது பாதிக்கப்பட்ட சிறுவனுக்குச் சுமார் 11 வயதாக இருந்தது. இக்குற்றத்திற்காகத் தேரருக்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 500,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த சாட்சியத்திற்கமைய, பௌர்ணமி தினமொன்றில் தனது பெற்றோருடன் குறித்த விகாரைக்குச் சென்றிருந்த போது, விகாராதிபதி, சிறுவர்களில் எவரேனும் துறவறம் பூண விரும்புகிறார்களா என வினவியுள்ளார்.

ஆரம்பத்தில் தாயார் தயக்கம் காட்டிய போதிலும், பின்னர் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அச்சிறுவன் துறவறம் பூண்டு, மற்றும் மற்றுமொரு தேரருடன் விகாரையில் தங்கியுள்ளார்.

சுமார் பத்து மாத காலப்பகுதியில், தேரர் தன்னைப் பல்வேறு வகையான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியதாகச் சிறுவன் சாட்சியமளித்துள்ளான். குறித்த விகாரையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த அம்பாறை மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, அச்சிறுவன் தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமையை மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.

மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி, சிறுவர் சாட்சிகளின் நம்பகத்தன்மை மிகக் கவனமாக மதிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேவேளை, சிறுவயதின் தனித்துவமான பண்புகளைப் புறக்கணிக்கும் அளவுகோல்களைப் பயன்படுத்தி அவர்களின் சாட்சியங்களை எடைபோடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"