முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று (18) தனது 81வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூத்த மகன் நாமல் ராஜபக்ச எம்.பி தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
"எனது அன்பிற்குரிய தந்தைக்கு, இந்த ஆண்டு உங்கள் பிறந்தநாளில், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களைப் பிரிந்து, உங்கள் அருகில் நின்று வாழ்த்த முடியாத இந்தக் கடினமான சூழ்நிலையை கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், சிறைச்சாலையையும் தாண்டி உங்கள் மீது நான் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் எல்லையின்றி உணர்கிறேன்.
நாம் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ளும்போது, எமது பெற்றோரின் அன்பும், முன்மாதிரியும், வாழ்க்கைப் பாடங்களுமே எமக்குப் பலம் சேர்க்கின்றன.
தலைமைத்துவம் என்பது வெறுமனே ஒரு பதவியை வகிப்பது மட்டுமல்ல என்பதை நீங்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்.
அது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது, சவால்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் இருப்பது மற்றும் நாம் நம்பும் கொள்கைகளுக்காகத் துணிச்சலுடன் நிற்பது என்பதை உங்கள் வாழ்க்கை எங்களுக்குக் காட்டியது.
நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் இருண்ட காலகட்டங்களில் ஒன்றில், யாருக்கும் அஞ்சாமல் தாய்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் அன்புக் குழந்தைகளுக்கு அமைதியை உருவாக்கிக் கொடுத்த துணிச்சலான தலைவர் நீங்கள். ஒரு மகனாக, சவால்களுக்கு மத்தியில் நீங்கள் தாங்கிக்கொண்ட பொறுப்புகள், தியாகங்கள் மற்றும் பல விடயங்களை நான் மிக நெருக்கமாக அறிவேன்.
இன்று நான் எதிர்கொள்ளும் இந்தக் கடினமான நேரத்தில், நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த பொறுமை, தைரியம் மற்றும் அசைக்க முடியாத மனவுறுதியின் மதிப்பை நான் ஆழமாகப் புரிந்துகொள்கிறேன்.
ஒரு தந்தையின் இதயம் எவ்வளவு வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். இதயத்தின் ஆழமான இடத்திலிருந்து, உலகின் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு வலிமையான தந்தையாக இருப்பது எப்படி என்பதை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்.
நானும் இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு உண்மைக்காகப் போராடும் ஒரு தந்தையாக இருக்கிறேன். இன்று நான் உங்கள் அருகில் இல்லாவிட்டாலும், உங்கள் இரத்தத்தைச் சுமந்த எனது குழந்தைகள் இன்று உங்கள் அருகில் இருப்பார்கள்.
எனக்காக அவர்கள் உங்களை அணைத்துக்கொள்வார்கள். கைகளால் உங்களை அணைக்க முடியாததால், எழுத்துக்களால் உங்களை அணைத்துக்கொள்ள எண்ணினேன். ஏனெனில், ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பைத் தொலைவினால் பிரிக்க முடியாது.
எனது அன்புத் தந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக