BREAKING
தங்கம் கடத்த முயற்சி ; தலைமன்னாரில் சிக்கிய இருவர் கைது யாழில் தொடரும் மர்ம மரணங்கள் ; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் சேவை தற்காலிக இடைநிறுத்தம் கேது-செவ்வாய் கூட்டணி ; இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும் தெற்காசியாவில் இலங்கை படைத்த சாதனை ; தாய் மரண விகிதம் வீழ்ச்சி தங்கம் கடத்த முயற்சி ; தலைமன்னாரில் சிக்கிய இருவர் கைது யாழில் தொடரும் மர்ம மரணங்கள் ; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் சேவை தற்காலிக இடைநிறுத்தம் கேது-செவ்வாய் கூட்டணி ; இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும் தெற்காசியாவில் இலங்கை படைத்த சாதனை ; தாய் மரண விகிதம் வீழ்ச்சி

தங்கம் கடத்த முயற்சி ; தலைமன்னாரில் சிக்கிய இருவர் கைது

தங்கம் கடத்த முயற்சி ; தலைமன்னாரில் சிக்கிய இருவர் கைது

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளையினால், நேற்று (17) தலைமன்னார் பேசாலை பிரதேச கடற்பரப்பில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 01 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கக் கட்டிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள், கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"