BREAKING
தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள் இலங்கை ஆட்கடத்தல் வழக்கில் தலைமறைவான முக்கிய சந்தேகநபர் இந்தியாவில் கைது தமிழர் பகுதியில் பொலிஸாரின் சோதனையில் சிக்கிய நால்வர் தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் கடற்படையினரால் மீட்பு தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள் இலங்கை ஆட்கடத்தல் வழக்கில் தலைமறைவான முக்கிய சந்தேகநபர் இந்தியாவில் கைது தமிழர் பகுதியில் பொலிஸாரின் சோதனையில் சிக்கிய நால்வர் தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் கடற்படையினரால் மீட்பு

கிணற்றுக்குள் சடலம் ; வயது யுவதியுடன் பிடிபட்ட இரு இளைஞர்கள்

கிணற்றுக்குள் சடலம் ; வயது யுவதியுடன் பிடிபட்ட இரு இளைஞர்கள்

அநுராதபுரம் - ஹொரவபொத்தானையில் உள்ள பாழடைந்த விவசாயக் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய யுவதி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி இஹலகும்புக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் சடலம் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஹொரவபொத்தானை பொலிஸார் ஆரம்பித்த விசாரணைகளின் போது, குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, 17 வயதுடைய சந்தேகநபரான யுவதி ஒருவரும், 23 மற்றும் 26 வயதுடைய இரண்டு ஆண் சந்தேகநபர்களும் நேற்று (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இஹலகும்புக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அதே பகுதியிலேயே வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துக்கான காரணம், சம்பவம் இடம்பெற்ற விதம் அல்லது சந்தேகநபர்களுக்கும் உயிரிழந்தவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த மேலதிக விபரங்களைக் இதுவரை வெளியிடவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"