BREAKING
தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விமல் வீரவங்ச கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில் தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள் தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விமல் வீரவங்ச கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில் தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்

தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் கடற்படையினரால் மீட்பு

தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் கடற்படையினரால் மீட்பு

 இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பலநாள் மீன்பிடிப் படகில் திடீர் சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், கடற்படையினரின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த மீனவர் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐந்து மீனவர்களுடன் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி கடலுக்குச் சென்ற ‘Mary 02’ என்ற பலநாள் மீன்பிடிப் படகு, ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 546 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நோய்வாய்ப்பட்ட மீனவர் முதலில் ‘BW Helios’ என்ற வர்த்தகக் கப்பலில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டார்.

பின்னர், கடற்படையின் P 411 அதிவேகப் படகு மூலம் அவரைக் கரைக்கு அழைத்து வந்து ஆரம்பகட்ட முதலுதவி வழங்கியதுடன், வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"