BREAKING
நீதிமன்ற வளாகத்தில் இப்படியா? தந்தையும் இரு மகன்களும் அரங்கேற்ற முனைந்த தகாத செயல் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல் வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர் பகுதி இளைஞன் அதிரடி கைது ; அதிகாலையில் பரபரப்பை கிளப்பிய சம்பவம் கனடாவிலிருந்து இந்தியா வந்த காதலிக்கு நடந்த அதிர்ச்சி ; வயதை அறிந்ததும் பின்வாங்கிய காதலன்? இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! நீதிமன்ற வளாகத்தில் இப்படியா? தந்தையும் இரு மகன்களும் அரங்கேற்ற முனைந்த தகாத செயல் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல் வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர் பகுதி இளைஞன் அதிரடி கைது ; அதிகாலையில் பரபரப்பை கிளப்பிய சம்பவம் கனடாவிலிருந்து இந்தியா வந்த காதலிக்கு நடந்த அதிர்ச்சி ; வயதை அறிந்ததும் பின்வாங்கிய காதலன்? இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை!

நீதிமன்ற வளாகத்தில் இப்படியா? தந்தையும் இரு மகன்களும் அரங்கேற்ற முனைந்த தகாத செயல்

நீதிமன்ற வளாகத்தில் இப்படியா? தந்தையும் இரு மகன்களும் அரங்கேற்ற முனைந்த தகாத செயல்

தும்பரை போகம்பரை சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்கா தெல்தெனிய நீதமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதியொருவருக்கு வழங்குவதற்காக ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இரண்டு மகன்களும் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தந்தை 65 வயதுடையவராவார். மகன்கள் இருவரும் 35 மற்றும் 22 வயதுடையவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

கஞ்சா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பான வழக்கு தெல்தெனிய நீதமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் தோன்றுவதற்காக மகன்களில் ஒருவர் அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவருடன் தந்தையும் மற்றைய சகோதரனும் வருகை தந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 25 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் இவர்களிடமிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்த மகன், அங்கு தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்னர் அபராதம் செலுத்தப்படும் வரை நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் சந்தர்ப்பத்தில், சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதியொருவருக்குச் சிறைச்சாலைக்குள் வைத்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வழங்குவதே இவர்களின் திட்டமாக இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நீதிமன்றச் சிறைச்சாலைக்குள் கைதியொருவருக்குப் போதைப்பொருள் வழங்குவதற்கான திட்டம் இருப்பதாகத் கிடைத்த ,இரகசியத் தகவலை அடுத்து, வழக்கு விசாரணை நடைபெறும் நேரத்தில் சில பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடைகளில் நீதிமன்ற மண்டபத்திற்குள் தங்கியிருந்து அது தொடர்பில் விழிப்புடன் செயற்பட்டுள்ளனர்.

தமது வழக்கு அழைக்கப்படும் வரை நீதிமன்ற மண்டபத்தில் தங்கியிருந்த ஒரு மகன், நீதிமன்ற மண்டபத்தின் பின் கதவு வழியாகத் தப்பியோட முயன்றபோது, பொலிஸ் அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவருடன் தந்தையையும் மற்றைய சகோதரனையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் தலத்துஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர். தந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மகன்கள் இருவரும் தொடர்பாகத் தெல்தெனிய பொலிஸாரால் நீதிமன்றத்தின் ஊடாகப் பெறப்பட்ட 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"