BREAKING
14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர் அனிருத்- காவ்யா மாறன் திருமணம்; சமூகவலைத்தளங்களில் வைரல் விரிவுரையாளர் மஹிந்த பத்திரன பகிரங்க மன்னிப்பு கோரல் 14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர் அனிருத்- காவ்யா மாறன் திருமணம்; சமூகவலைத்தளங்களில் வைரல் விரிவுரையாளர் மஹிந்த பத்திரன பகிரங்க மன்னிப்பு கோரல்

ஐஸ் போதைப்பொருளுடன் படகொன்று முற்றுகை

ஐஸ் போதைப்பொருளுடன் படகொன்று முற்றுகை

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக  தென் கடற்பரப்பில் பயணித்த பலநாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினால் இடைமறிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகுடன் அதில் இருந்த பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால்  தடுக்கப்பட்டு, தற்போது கரைக்குக் அழைத்துவரப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

நவம்பர் 05ஆம் திகதி, இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 132 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 57 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்றைச் சந்தேக நபர்கள் ஐந்து பேருடன் கைது செய்தனர். 

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கை கடற்படையினர் 2,773 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளையும், 2,130 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 114 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். குறித்த போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"