BREAKING

பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரை

பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையினை இன்று (12) பாராளுமன்றில் நிகழ்த்தவுள்ளார்.இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாகும்.

2027ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் 7ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்தவினால் முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, 2027ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 4,992 பில்லியன் ரூபாவாகும்.

அதிகபட்ச ஒதுக்கீடாக, ஜனாதிபதி வைத்துள்ள நிதி அமைச்சுக்கு 856 பில்லியன் ரூபாய் இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 590 பில்லியன் ரூபாவும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 500 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 458 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 328 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரவு செலவுத் திட்ட உரையின் போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடுத்த ஆண்டிற்கான வருமானக் கணிப்பீடுகள், நிதிக் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் குறித்த விவரங்களை ஜனாதிபதி வெளியிடுவார்.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 முதல் 20 வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 20 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், அரசாங்கத்தின் பொருளாதார உறுதிப்பாட்டு இலக்கிலிருந்து பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றியமைக்கும் அபிவிருத்தியை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக மொத்தம் 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"